முல்லைத்தீவு மாவட்டம் கரைதுறைப்பற்று பிரதேச செயலக/பிரதேச சபைக்கு உட்பட்ட சிலாவத்தை கிராமதில் அமைந்துள்ள இளம்பறவை விளையாட்டு கழகதினர், சிலாவத்தை கிராம அபிவிருத்தி சங்கத்தினர், அன்னம்மாள் ஆலயம் பங்கு மக்களின் மற்றும் அவ் கிராம மக்களினாலும் தமது அமைப்புகளின் தேவைகளை முன்வைத்திருந்தனர்.

அதற்கு அமைவாக இலங்கை முழுவதுக்குமான இலங்கை தமிழரசு கட்சியின் வாலிபர் முன்னனியின் இணைப்பொருளாளரும், இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினருமாகிய அன்ரனி ஜெயநாதன் பீற்றர் இளஞ்செழியன் அவர்களின் சிபாரிசின் பேரில் வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி குழு இணைத்தலைவருமாகிய கெளரவ சிவப்பிரகாசம் சிவமோகன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் இருந்து சிலாவத்தை கிராம வளர்ச்சிக்காக சிலாவத்தை இளம்பறவை விளையாட்டு கழகதிற்கு 1 மில்லியன், சிலாவத்தை வயல் வீதி புனரமைப்புக்கு 1 மில்லியன், சிலாவத்தை அன்னம்மாள் ஆலயம் புனரமைப்புக்கு 0.3 மில்லி என கம்பரலியா திட்டத்தின் கீழ் 2.3 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டது.

இவ் ஒதுக்கீடுக்கான அனுமதி கடித்தினை பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியோக செயலாளர் எஸ். ரூபன் அவர்களினால் 04.08.2019 அன்று வழங்கிவைக்கப்பட்டது.


0 Shares