கண்டியில் இருந்து பொகவந்தலாவ பகுதிக்கு கோழி ஏற்றிவந்த லொறி வண்டி ஒன்று ஹட்டன் பொகவந்தலாவ பிரதான விதியின் நோர்வூட் கிளங்கன் பகுதியில் வீதியை விட்டு விலகி சுமார் 30அடிபள்ளத்தில் குடைசாய்ந்ததில் லொறியின் சாரதி
பலத்த காயங்களுக்கு உள்ளாகி டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் 02.01.2018புதன்கிழமை விடியற்காலை இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

கண்டியில் இருந்து பொகவந்தலாவ சென்ஜோன் டிலரி பகுதிக்கு விற்பனை செய்வதற்காக கோழிகளைஏற்றி வந்த லொறிவண்டி அதிகவேகத்தின் காரனமாக கட்டுபாட்டை இழந்ததன் காரனமாகவே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவூம் குறித்த
லொறிவண்டியில் இரண்டு பேர் பயனித்ததாகவூம் சம்பவத்தில் சாரதிக்கு மாத்திரம் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவூம் நோர்வூட் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துளளது.

எனவே காயங்களுக்கு உள்ளான சாரதி தொடர்ந்தும் டிக்கோயா கிழங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாகவூம் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.