வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கைகொடுக்கும் நோக்கிலும் அவர்களின் கற்றலை ஊக்கிவிக்கும் நோக்குடனும் இலங்கை போக்குவரத்து சபையின் முல்லைத்தீவு சாலை பணியாளர்கள் அனைவரும் இணைந்து 52000 /= ஆயிரம் ரூபா பெறுமதியிலான  கற்றல் உபகரணங்களை  வழங்க முன்வந்துள்ளனர்.


 அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை அடுத்து நிவாரணம் வழங்கும் செயற்பாட்டிலும் அதனை தொடர்ந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் வாழும் மாணவர்களின் கற்றல் செயற்பாடுக்கு கைகொடுக்கும் நோக்கிலும் முகநூல்  மூலம் ஒன்றிணைந்த உலகளாவிய நண்பர்களின் முயற்சியால்  உதவிகள் முல்லைத்தீவு மாவட்டத்திலும் கிளிநொச்சி மாவட்டத்திலும் முன்னெடுக்கப்பட்டு வருக்கின்றது.

அந்தவகையில் இலங்கை போக்குவரத்து சபையின் முல்லைத்தீவு சாலையினர் தமது உதவியை உலகளாவிய முகநூல் நண்பர்கள் குழுமத்திடம் இன்றைய தினம் கையளித்துள்ளனர். 
இலங்கை போக்குவரத்து சபையின் முல்லைத்தீவு சாலையில் சாலை முகாமையாளர் மோதிலால் அவர்களால் முகநூல் நண்பர்கள்  குழுமத்தினரிடம் வழங்கி வைக்கப்பட்டது.

126 Shares