முல்­லைத்­தீவு மாவட்­டத்­தின் பழைய செம்­மலை நீரா­விப் பிள்­ளை­யார் ஆல­யத்­தில் பல­வந்­த­மாக நிறு­வப்­பட்­டுள்ள புத்­தர் சிலை தொடர்­பில் முழு­மை­யான விசா­ரணை நடத்தி அறிக்கை சமர்­பிக்­கு­மாறு பொலிஸ்மா அதி­ப­ருக்கு, வட­கி­ழக்கு அரச தலை­வர் செய­ல­ணி­யால் எழுத்­து­மூ­லம் கோரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது.

அரச தலை­வர் செய­ல­ணி­யின் கூட்­டம் கடந்த 17ஆம் திகதி இடம்­பெற்­றது. தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் வன்னி மாவட்ட நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் திரு­மதி சாந்தி சிறீஸ்­கந்­த­ராசா, புத்­தர் சிலை விவ­கா­ரத்தை எழுப்­பி­யி­ருந் தார்.

2016ஆம் ஆண்டு வரை­யில் நீரா­விப் பிள்­ளை­யார் ஆல­யப் பகு­தியை இரா­ணு­வத்­தி­னர் தமது கட்­டுப்­பாட்­டுக்­குள் வைத்­தி­ருந்­த­னர். அந்­தப் பகு­தி­யில் புத்­தர் சிலை வைக்­கப்­பட்­டது. பிக்கு ஒரு­வர் அங்கு வழி­பா­டு­கள் நடத்தி வந்­தார்.

இரா­ணு­வத்­தி­னர் அங்­கி­ருந்து வெளி­யே­றி­ய­போ­தும் புத்­தர் சிலை அகற்­றப்­ப­ட­வில்லை. நீரா­விப் பிள்­ளை­யார் ஆல­யத்­தில் தற்­போது மிகப் பெரிய புத்­தர் சிலை நிறு­வப்­பட்­டுள்­ளது. பௌத்­தர்­களே வசிக்­காத பிர­தே­சத்­தில் முன்­னெ­டுக்­கப்­பட்ட இத்­த­கைய செயற்­பா­டு­கள் உடனே நிறுத்­தப்­பட வேண்­டும் என்று அரச தலை­வர் செய­ல­ணிக் கூட்­டத்­தில் கோரிக்கை முன்­வைக்­கப்­பட்­டது.

இது தொடர்­பில் முழு­மை­யான விசா­ரணை நடத்தி அறிக்கை சமர்­பிக்­கு­மாறு அரச தலை­வர் செய­ல­ணி­யால், பொலிஸ்மா அதி­ப­ருக்கு எழுத்­தில் கடி­தம் அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளது. இதன் பிர­தி­கள் வடக்கு மாகாண மூத்த பொலிஸ்மா அதி­பர், மாவட்­டச் செய­லர் ஆகி­யோ­ருக்­கும் அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளன.

இந்த விட­யம் தொடர்­பில் வன்னி மாவட்ட நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சாள்ஸ் நிர்­ம­ல­நா­தன், வடக்கு மாகாண மூத்த பிர­திப் பொலிஸ்மா அதி­பரை நேற்­று­முன்­தி­னம் சந்­தித்­துக் கலந்­து­ரை­யா­டி­யுள்­ளார்.