போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் நேற்று கைதான பங்களாதேஷ் இளம் யுவதியொருவரிடமிருந்து 3,880 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. அவரது உடமையிலிருந்தும், வீட்டிலிருந்தும் 32.329 கிலோகிராம் ஹெரோயினை பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.

நேற்று (15) காலை 11.30 மணியளவில் பொலிசாரால் இவர் கைதானார். பங்களாதேஷை சேர்ந்த 23 வயதுடைய Surugh Morne என்ற யுவதியே கைதானார்.

கைதானபோது, அவரிடம் ஒரு கிலோ கிராம் போதைப்பொருள் இருந்தது. இரத்மலானவில் இருந்த அவரது வீட்டில் சோதனையிட்ட போது, 31.329 கிலோ கிராமுடைய ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.

தற்போது அந்த யுவதி பொலிசாரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகிறார்.

0 Shares