அஜித்தின் விஸ்வாசம் படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸ். ரஜினியின் பேட்ட படத்துடன் படம் வெளியாவதால் இரண்டு படங்களும் வசூலில் எப்படி கலக்கும் என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர்.

கிராமத்து பின்னணியில் அஜித் மாஸாக வருவதால் கண்டிப்பாக இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி விடுவார்கள். இப்படத்தை தொடர்ந்து தல தீரன் பட புகழ் வினோத் இயக்கத்தில் அடுத்த படம் நடிக்க இருக்கிறார். இப்படத்திற்கான பூஜைகள் அண்மையில் போடப்பட்டது, புகைப்படங்களும் வெளியானது.

தற்போது அடுத்தக்கட்டமாக படம் குறித்து தயாரிப்பாளர் போனி கபூர் சென்னையில் படக்குழுவினருடன் பேசி வருகிறார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது, அநேகமாக அடுத்த அப்டேட் வரலாம் என்கின்றனர்.

0 Shares