அண்மையில் கண்டி மாவட்டத்திலுள்ள முக்கிய நகரத்தில் நடந்த சம்பவமொன்று குறித்து ஊடகவியலாளர் ஒருவர் தனது அனுபவத்தை பதிவு செய்துள்ளார்.

பொது இடமொன்றில் இலங்கை தேசியக் கொடியை அணிந்தபடி குளித்துக் கொண்டிருந்த முதியவர் ஒருவரை அவதானித்து, அவரிடம் ஊடகவியலாளர் பேச்சுக் கொடுத்துள்ளார்.

தேசியக்கொடியை அணிந்து கொண்டு குளிக்கிறீர்கள். இது தேசியக்கொடியை அவமதிக்கும் செயல். தண்டனைகூட கிடைக்கலாமென கூறியிருக்கிறார்.

முதியவருக்கு அதிர்ச்சி.

தேசியக்கொடியை அணிவது, அதை அவமதிப்பதாக அமையுமென அவர் தெரிந்திருக்கவில்லை. ஒரு துணிதானே என நினைத்துக் கொண்டு, அதை அணிந்து கொண்டு குளித்துள்ளார்.

இருந்தாலும், சமாளித்துக் கொண்டு, தற்போதைய அரசியல் நிலைமையுடன் அதை தொடர்புபடுத்தி பதில் கேள்வி கேட்டுள்ளார். தம்பி இதையெல்லாம் பெரிய விசயமாக வந்து கேட்கிறீர்களே. நமது நாடாளுமன்றத்திற்குள் என்ன நடக்கிறது. அங்கு நடக்காததா இங்கு நடந்து விட்டது?“ என பதில் கேள்வி கேட்டிருக்கிறார்.

பின்னர் அவருக்கு வேட்டியொன்று பெற்றுக்கொடுக்கப்பட்டு, தேசியக்கொடியை வாங்கியதாக ஊடகவியலாளர் பதிவுசெய்துள்ளார்.

0 Shares