வடக்கு ஜப்பானின் சப்போரா பகுதியிலுள்ள மது அருந்தகம் ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் 40இற்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற குறித்த வெடிப்பு சம்பவத்திற்கான காரணம் இதுவரை தெரியாத நிலையில், இதனால், அருகிலிருந்த பல கட்டடங்களும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில், அவர்களில் ஒருவரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

வெடிப்பு சம்பவத்தை அடுத்து ஏற்பட்ட தீப் பரவலை பொலிஸாரும் தீயணைப்பு வீரர்களும் இணைந்து கட்டுப்படுத்தியுள்ளனர்.

குறித்த அனர்த்தத்தை தொடர்ந்து அப்பகுதியில் எரிவாயு மணம் வீசியதாக சாட்சியாளர்கள் தெரிவித்த நிலையில், எரிவாயு கசிவே அனர்த்தத்திற்கு காரணம் என சந்தேகிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

0 Shares