மொரோக்கோவில் நடைபெற்ற உலக்கிண்ண FootGolf போட்டிகளில் பிரான்ஸ் அணி சம்பியன் பட்டத்தை வெற்றிக் கொண்டுள்ளது.

உலக்கிண்ண Foot Golf போட்டிகளின் இறுதி போட்டி மொரோக்கோவில் இன்று நடைபெற்றது. இதில் பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து அணிகள் பலரீட்சை நடத்தியது.

போட்டி ஆரம்பித்தது முதல் இரு அணிகளும் ஒருவொருக்கொருவர் விட்டுகொடுக்காமல் விளையாடினர். அதாவது 3 க்கு 3 என்ற புள்ளிகள் கணக்கில் இரு அணி வீரர்களும் சமநிலை அடைந்திருந்தன.

18 சுற்றுகளை கொண்ட இந்த போட்டியின் இறுதியில் பிரான்ஸ் அணி 4 க்கு 3 என்ற கணக்கில் புள்ளிகளை கைபற்றி வெற்றிபெற்றது. ஏற்கனவே பிரான்ஸ் அணி ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான போட்டியின் சம்பியன் பட்டத்தை கடந்த வருடம் வென்றிருந்தது.

உலக கிண்ண Foot Golf போட்டிகளில் அமெரிக்கா, ஸ்பெயின் மற்றும் பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் பங்குபற்றின. இந்த போட்டி ஆண் பெண் இருபாலாருக்கும் இடையில் நடத்தப்பட்டமை குறிப்பிடதக்கது.

0 Shares