உலகக் கிண்ண ஹொக்கி தொடரின் இறுதிப்போட்டியில் நெதர்லாந்து அணியை வீழ்த்தி சம்பியன் பட்டத்தை வென்றது பெல்ஜியம்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில் பெனால்டி ஷுட் முறையில் நெதர்லாந்து அணியை 3-2 என்ற கோல் கணக்கில் பெல்ஜியம் அணி வீழ்த்தியது.

14 ஆவது உலகக் கிண்ண ஆண்கள் ஹொக்கி போட்டி ஒடிசா மாநிலத்தின் தலைநகர் புவனேஸ்வரத்தில் உள்ள கலிங்கா மைதானத்தில் நடைபெற்றது. இதில் லீக், காலிறுதி மற்றும் அரையிறுதி ஆட்டங்கள் முடிந்து இன்று இறுதிப்போட்டி நடைபெற்றது.

இரு அணிகளும் ஆக்ரோஷமாக மோதிய நிலையில் ஆட்டம் முடியும் வரை எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.

இதையடுத்து, இந்த தொடரில் இரண்டாவது முறையாக பெனால்டி ஷுட் முறை கொண்டு வரப்பட்டது. இதில் பெல்ஜியம் அணி என்ற 3 – 2 என்ற கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தி உலகக் கிண்ணத்தை வென்றது.

இதேவேளை, இன்று நடைபெற்ற மூன்றாவது இடத்துக்கான போட்டியில் இங்கிலாந்து அணியும் அவுஸ்ரேலிய அணியும் மோதிக்ககொண்டன. இதில் 8 – 1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி அவுஸ்ரேலியா அணி வெற்றி பெற்று வெண்கலம் வென்றது.

0 Shares