மொரோக்கோவின் மராக்கேஷில் இடம்பெற்று வந்த ஃபுட்கோல்ஃப் (footgolf) உலக சாம்பியன்ஷிப் போட்டியில் ஆஜன்டீனாவின் வீரர் மாட்டியாஸ் பெர்ரோன் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளார்,

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஆண்களுக்கான சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பிரித்தானியாவின் பென் கிளாக்கை எதிர்கொண்ட பெர்ரோன் இறுதிச் சுற்று வரை சிறப்பாக ஆடி மேலதிகமாக இரண்டு புள்ளிகளுடன் வெற்றி கொண்டார்.

அதேவேளை, இரண்டு வருடங்களுக்கு முன்னர் இதேபோன்று சாம்பியன்ஸ் பட்டம் வென்ற தனது சொந்த நாட்டைச் சேர்ந்த வீரரான கிறிஸ்டியன் ஒட்டேரோவையும், பெர்ரோன் முன்னைய போட்டிகளில் தோற்கடித்தார்.  இதனிடையே, பெண்களுக்கான போட்டியில் பிரித்தானியாவைச் சேர்ந்த மூன்று பெண்கள் முதல் மூன்று இடங்களை தட்டிச் சென்றனர்.

ஸோஃபி பிரவுன் (Sophie Brown) முதலாவது இடத்தையும், கிளெரி வில்லியம்ஸ் (Claire Williams) மற்றும் நடாலி ரிச்சட்சன் (Natalie Richardson) முறையே இரண்டாம் மூன்றாம் இடங்களை பெற்றனர்.

கடந்த 9 ஆம் திகதி தொடக்கம் நேற்று வரை இடம்பெற்ற ஃபுட்கோல்ஃப் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் 36 நாடுகள் கலந்து கொண்டன. அத்துடன் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை இந்த போட்டிகள் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டி முழுமையாக கோல்ப் விதிமுறைகளுக்கு அமைவாகவே விளையாடப்படுகின்றது. காற்பந்தளவு பள்ளத்தை ஒரு முழுமையான காற்பந்தை விழச் செய்ய வேண்டும். அத்துடன் அந்த வீரர் அல்லது வீராங்கனை காற்பந்து போட்டிகளிலும் சிறப்பு திறமை பெற்றிருக்க வேண்டும் என்பது கூடுதல் விதிமுறையாகும்.

கோல்ஃப் போட்டிகளை ஸ்ட்ரோக்பிலேயைப் பயன்படுத்தி விளையாட முடியும். இந்த போட்டிகளின் விதிமுறைகளின் படி, கோல்களில் விளையாடுவதன் மூலம் ஒவ்வொரு பக்கத்திலும் வெற்றி பெறும் துளைகளை கணக்கிடுவதன் மூலம் மதிப்பெண் கணக்கிடப்படுகிறது.

0 Shares