பதுளை, மஹியங்களை வீதியில் அம்பகஹஓய பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றின் அறையில் இருந்து இன்று காலை சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

தெமோதர பதுளை வீதியைச் சேர்ந்த 37 வயதுடைய ராஜசங்கர் என்ற நபரே சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

இவர் ஒருவகை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தும் மருத்து பதிவு புத்தகம் உள்ளிட்ட சில ஆவணங்கள் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

0 Shares