மட்டக்களப்பு கல்லடி பிரதேசத்தில் நிர்மாணிக்கப் பட்டுவரும் தனியார் வைத்தியசாலையின் இரவுநேர காவலாளி இன்று (14) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு, கூழாவடி திஸ்ஸவீர சிங்கம் சதுர்க்கத்தைச் சேர்ந்த 55 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான சிவபாதசுந்தரம் சிவசீலன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் கட்டிட நிர்மாண பணியில் கடமையாற்றி வந்துள்ளார் எனவும் வழமைபோல நேற்று இரவு கடமையில் ஈடுபட்டுவந்த நிலையிவே இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது..

இவ்வாறு மீட்கப்பட்வரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 Shares